மாலபே தனியார் கல்லூரியிலிருந்து 26 மனித உடற்பாகங்கள் CID இனரால் மீட்பு.

எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு விசாரணைக்கும் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பணிப்பாளர் ரேணுக சமீர சேனாராத்தன தெரிவித்துள்ளார்.

நேற்று(03) மாலை குற்ற விசாரணைப் பிரிவினர், மலபே தனியார் மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தி இருந்தனர்.

கொலை செய்யப்பட்ட வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் இந்த கல்லூரியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன் அங்கு குறித்த இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது அங்கிருந்து 26 மனித உடற்பாகங்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் தம்வசப்படுத்தினர்.

இதனை அடுத்தே கல்லூரியின் பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.