மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி அநேகமாக மக்கள் மயமாக்க நடவடிக்கை, ஜனாதிபதி தெரிவிப்பு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட ஆறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடி இருந்தது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.

குறித்த கல்லூரியை அநேகமாக மக்கள் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி இதன்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

எட்கா தொடர்பில் கருத்து வெளியிடும் போது, இது குறித்து முழுமையாக ஆராய்ந்து, மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னரே இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

வைத்தியர்கள் சங்கத்தின் இணைப்பாளர் வைத்தியர் நலிந்த ஹேரத் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.