மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை – GMOA

மாலபேயில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி (SAITM) தொடர்பாக இலங்கை மருத்துவ சபையின் மீது மேற்கொள்ளப்படும் நேரடி மற்றும் மறைமுக அரசியல் அழுத்தங்கள் தொடர்பாக சர்வதேச மருத்துவ சபையில் முறைப்பாடு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச விசாரணை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர், மருத்துவர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.