இன்றைய தினத்தை தேசிய சைட்டம் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது சைட்டத்திற்கு எதிரான அமைப்பு.
அண்மைய காலங்களில் சைட்டத்திற்கு எதிரான போராட்டம்பல வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் தொடராக, மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டியில் ஆரம்பித்த பேரணி நேற்று கேகாலை – நெலும்தெனிய நகரை வந்தடைந்தது. இன்றைய தினம் மீண்டும் தொடரும் அந்த பேரணி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சைட்டத்திற்கு எதிரான அமைப்பு நாடளாவிய ரீதியாக இடம்பெறும் வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.