மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்கவுள்ளோம் – லக்ஷமன்.

மாலபே தனியார் வைத்திய கல்லூரி தொடர்பாக உயர்நீதிமன்றம் பெற்றுத்தரும் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் தேவையற்ற விடயத்திற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக நேற்று(31) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையின் போது கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதலை நடத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.