மாலபே மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்

கொழும்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் சுகாதார அமைச்சுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவக் கல்லூரியினை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மருத்துவக் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் சுகாதார அமைச்சு வரை சென்றதாக எமது அலுவலக செய்தியாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாலபேயில் அமைந்துள்ள தனியார் மருத்துவ கல்லூரியினை சட்டரீதியானதாக மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மருத்துவ பீட மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.