மாலிங்கவின் ஓமான் “டுப்ளிகேட்” மாலிங்கவை பங்களாதேஷில் சந்திப்பு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க இலங்கைக்கென்றே கிடைத்த மாபெரும் பொக்கிசமென்றே இலங்கை கிரிகெட் அணியினர் கருதுகின்றனர்.இவ்வாறானதொரு பந்து வீச்சாளர், எந்தவொரு நாட்டிலும் இதுவரையிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், இவ்வாறானதொரு சிறப்புத்தேர்ச்சியிருந்தும் அதனை மற்ற நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் வீரர்களுடன் பகிர்ந்து கொள்வது, பந்து வீச்சின் ரகசியங்கள் குறித்து கூறுவது போன்றவை கீழ்த்தரமான செயலாகவே கருதப்படுகின்றமை யாரும் அறிந்ததே.

இவ்வாறே, லசித் மாலிங்கவின் பந்து வீச்சினை ஒத்த “டுப்ளிகேட்” பந்து வீச்சொன்று மைதானத்தில் வளம் வருகின்றது. அது நேற்றுக்கு முந்தநாள் (09) நடைபெற்ற உலகக்கிண்ண இருபது2௦ போட்டியில் முதற்தர வரிசையில் அயர்லாந்து மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையிலான போட்டியில் நடந்தேறியது.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு புதுமுகமான வீரரான முனிஸ் அன்சாரி என்பவரின் பந்து வீச்சானது மாலிங்கவின் பந்து வீச்சினை ஒத்ததாகவே காணப்படுகின்றமை போட்டியினை பார்வையிட்ட அனைவருக்கும் நன்கு புரிந்திருக்கும்.

2013ம் வருடம் சர்வதேசத்திற்கு அறிமுகமான முனிஸ், நேற்றைக்கு முந்தைய நாள் (௦9) நடைபெற்ற போட்டியின் போது 3விக்கெட்களைப் பெற்று அசத்தினார். இதனால் பிரபல அணிகளில் ஒன்றான அயர்லாந்தினை எதிர்த்து ஓமான் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும், இக்குறித்த போட்டிக்கு முன்பதாக லசித் மாலிங்க மற்றும் முனிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பங்களாதேசில் இடம்பெற்ற ஆசியக்கிண்ண போட்டியின் போது இடம்பெற்றுள்ளதுடன், அந்நேரம் லசித் மாலிங்க முனிஸ்’க்கு பந்து வீசுவது குறித்தான உபதேசங்களும் வழங்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

Asia-Cup-Qualifiers-Lasith-Malinga-s-tips-for-Munis-Ansari_StoryPicture