சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து லசித் மாலிங்க தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.
நேற்றைய(25) ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி குறித்து ஊடகங்களுக்கு பதிலளிக்கையில்;
“இது எனது இறுதி வருடங்களாகவும் இருக்கலாம், அதுமட்டுமின்றி சிலசமயம் சில மாதங்களாகவும் இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகயீனத்திற்கு சிகிச்சை பெற்றாலும், அதற்கான ஓய்வு காலத்தை சீராக கழிக்கமுடியாதுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணத்திற்கு கட்டாயம் பங்குபெற்ற வேண்டிய இக்கட்டான நிலையால் வலி நிவாரணிகளை துணையாய்க் கொண்டு களத்தில் இறங்க வேண்டியுள்ளதாகவும் மாலிங்க மேலும் குறிப்பிட்டிருந்தார்.