(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐசிசி இருபதுக்கு -20 சர்வதேச பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியில் நேற்று(06) வெளியிடப்பட்ட நிலையில் இதில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 592 புள்ளிகளுடன் 21 வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை தொடர்பில் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா, ஐசிசி டி-20 தரவரிசை பட்டியலில் 20 இடங்களை தாண்டி 21 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இது தொடர்பில் லசித் மாலிங்கவுக்கு வீரர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில், தூஸ்ரா பந்து வீச்சில் களமிறங்கி அசத்திய முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் மௌனமாக இருப்பதாக சிங்கள மொழி ஊடகமொன்று முரளியினை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.