மாலிங்கவின் சாம்பியன்ஸ் பயணம் மற்றும் மஹேலவின் பிற்குறிப்பு குறித்து போர்ட் கருத்து..

சாம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் முதல் போட்டியில் தலா 10 ஓவர் வீதம் பந்து வீச இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க பயிற்சி பெற்றுள்ளார் என இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்ட் cricinfo இணையத் தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் தெரிவித்திருந்தார்.

“மாலிங்க 100% உடற் தகைமையினை கொண்டு ஆரோக்கியமாக உள்ளதாக தான் நம்புகின்றேன். IPL போட்டிகளுக்கு செல்ல முன்னர் அவர் பயிற்சிகளில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டதனை வைத்து எனக்குள் நம்பிக்கை ஒன்று பிறந்தது எனலாம். எனக்கு கிடைக்கப் பெற்ற அவரது அனைத்து அறிக்கைகளும் சரியானது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளரான மஹேல உடனும் இரண்டு மூன்று தடவைகள் கதைத்தேன். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு போட்டியில் மாலிங்க விளையாடவில்லை என தெரிந்ததும் உடனே மஹேலவை தொடர்பு கொண்டு கேட்டேன் ஏதாவது பிரச்சினைகளா என்று.. மஹேல கூறியது மாலிங்கவினால் எவ்வித பிரச்சினைகளும் இல்லை, போட்டியில் வெற்றி பெற ஆவலாய் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாலிங்க கட்டாயம் தேவைப்பட்டவர். எனவே அவருக்கு ஓய்வு வழங்கினோம் என்றார். நான் நம்புகின்றேன் மாலிங்க இம்முறை IPL போட்டிகளில் சாதிப்பார்… ” என தெரிவித்திருந்தார்.

 

(rizmira)