IPL 2017 கிரிக்கெட் தொடரின் 22வது போட்டியில் நேற்று(20) மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணிகள் மோதின.
போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி, 198 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அதிரடியாக துடிப்பெடுத்தாடிய ஹசீம் அம்லா 60 பந்துகளுக்கு முகங்கொடுத்து 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 6 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 104 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
இது அவரின் முதலாவது 20/20 சதமாகும்.
மெக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ஒட்டங்கள்.
பதிலளித்து துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ், 15.3 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்தது.
37 பந்துகளில் 77 ஓட்டங்களைப் பெற்ற ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தெரிவானார்.
இந்த போட்டியில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய நிதிஸ் ராணா 34 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 62 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.