மாலிங்க’விற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடாத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் அனுமதியின்றி இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்றுள்ளதாக மாலிங்க மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை கடுமையாய்  விமர்சனம் செய்தததாகவும் மாலிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இந்தக் காரணிகளின் அடிப்படையில் லசித் மாலிங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்திய பிரிமியர் லீக் இருபதுக்கு20 போட்டித் தொடரில் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியை பிரதிநிதித்துவம் செய்கின்றார்.

கடந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் உபாதை காரணமாக இலங்கை அணியின் சார்பில் லசித் மாலிங்க போட்டியில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில் ஐ.பி.எல் போட்டித் தொடரில் பங்கேற்க லசித் மாலிங்க இந்தியா சென்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.