காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ள லசித் மலிங்கவிற்கு பதிலாக, மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்க, தனது உடற் தகுதியின்மையின் காரணமாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வைத்தியர் குழு, லசித் மலிங்க போட்டிகளில் விளையாடக்கூடிய அளவிற்கு உடற்தகுதியுடன் இல்லை எனவும் கூறி அவரை தொடரிலிருந்து நீக்கியது.
இந்நிலையில், மலிங்கவிற்கு ஈடாக அவரைப் போன்று அணிக்கு வெற்றியைத் தேடித் தரக்கூடிய வீரர் ஒருவரை மும்பை இந்தியன்ஸ் அணி தேடி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப் படுகிறது.