மாலிங்க’வை இழந்து தள்ளாடும் மும்பை இந்தியன்ஸ்..

நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்களில் 3-ல் தோற்று சரிவின் பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்டத்தில் ஐதராபாத்துக்கு எதிராக 142 ஓட்டங்களில் அடங்கிப் போனது. திறமைசாலிகள் பட்டாளம் நிறைய பேர் இருந்தும், ஒருசேர ‘கிளிக்’ ஆக முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சீசனில் இதுவரை மூன்று தொடக்க ஜோடியை பயன்படுத்தி பார்த்து விட்டார்கள். இப்போது தான் அணிக்கு வருகை தந்துள்ள மார்ட்டின் கப்தில் மற்றும் ஜோஸ் பட்லர், அணித்தலைவர் ரோகித் சர்மா, பாண்ட்யா சகோதரர்கள் அதிரடியில் மிரட்டினால், தலைநிமிரலாம்.

இந்நிலையில், போட்டிகளில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டியது அவசியம் என மும்பை அணியின் பந்துவீச்சாளர் சவுதி மேலும் கூறியுள்ளார்.