மாலிங்க பற்றி நெகிழ்ச்சிகரமான கருத்து வெளியிட்ட மஹேல

(FASTGOSSIP|COLOMBO) – உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி எதிர்பார்க்காத வகையில் வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை அணியின் வெற்றிக்கு நட்சத்திர வீரர் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான மஹேல ஜயவர்தன, மாலிங்கவின் சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் நெகிழ்ச்சிகரமான கருத்து ஒன்றை வெளியிட்டார்.

“இது மாலிங்கவின் திறமை குறித்த விடயமாகும். மாலிங்க அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் கடந்த சில வருடங்களாக இவ்வாறு தான் இலங்கை அணிக்குத் தேவையான நேரத்தில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்” என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

“உண்மையில் அவர் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் புதிய பந்தில் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தார். அனுபவமிக்க வீரரொருவர் மிகப் பெரிய போட்டித் தொடரொன்றில் திறமைகளை வெளிப்படுத்துவார். அதைத் தான் மாலிங்கவும் செய்தார்” என அவர் மேலும் கூறியுள்ளார். .

இதேவேளை, புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலும் உள்ள அணிகள் தமக்கெதிராக போட்டியிடவுள்ளன. இதனால் புள்ளிகளில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். நியூசிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணி அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் விளையாடவுள்ளது.

எனவே, இது பங்களாதேஷ் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகளுக்கு மிகப் பெரிய வாய்ப்பாக மாறிவிட்டது. எனவே அந்த அணிகள் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது” என மஹேல ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.