மாலிங்க மற்றும் இலங்கை அணியின் சவால் குறித்து பட்லர் கருத்து…

இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சளார்களது சவாலுக்கு தமது அணியும் தயாராகவே உள்ளதாக இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் இன்று(10) போட்டிக்கு முன்னதான ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

அவ்வாறே, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவும் எமக்கு தேர்சியானவர் என தெரிவித்துள்ளார்.

” இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர்களது சவால்களுக்கு நாம் தயார். வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க குறித்து கூறப்போனால் அவரும் நாமும் ஐபிஎல் போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். ஆதலால் அவரை எனக்கும் நன்றாக தேர்ச்சி ஆதலால் மற்றைய வீரர்களுக்கும் அவர் சவாலாக அமையாது என நினைக்கிறன்…”