மாலிங்க மும்பை இந்தியன்சை போட்டி நடுவில் கலக்க ஆயத்தம்

உபாதை காரணமாக இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகியிருந்த லசித் மாலிங்க இன்று(09) தொடங்கவுள்ள IPL இருபதுக்கு இருபது போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தொடக்கத்தில் விளையாடாது நடுவில் விளையாடாவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையாக 56 போட்டிகளைக் கொண்டுள்ள இம்முறை IPL போட்டியானது, மே மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு அணி 8 போட்டிகளில் விளையாடவுள்ளது. மும்பாய் மைதானத்தில் 5ம் போட்டி 24ம் திகதி நடைபெற்று முடிவதோடு, இறுதிப் போட்டி வரையிலும் நடைபெறவுள்ள போட்டிகளில் லசித் மாலிங்க விளையாடவுள்ளதாகவும் கிரிக்கெட் தரப்பு வட்டாரச் செய்திகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலிங்க விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியானது நாளை புனே அணியுடன் மோதவுள்ளது.

8 அணிகள் மோதும் குறித்த IPL போட்டிக்காக இம்முறை இலங்கை அணியிலிருந்து லசித் மாலிங்க மட்டுமின்றி திசர பெரேராவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், மலிங்கவிற்கு 5ம் போட்டியின் பின்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட முடியும் என அணிப் பயிற்சிவிப்பாளர் ரிகி பொண்டீன் நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  அவர் கூறுகையில்;

“மாலிங்க போட்டிகளின் நடுவில் சுகம் பெற்று அணியுடன் சேருவார் என நாம் நம்புகின்றோம். அவருக்கு 5ம் போட்டியிலிருந்து விளையாட வாய்ப்புள்ளது. எவ்வாராயினும், மும்பை மைதானத்தில் நடைபெறும் முதல் இரண்டு போட்டிகளின் பிற்பாடு மாலிங்கவின் உடல்நலத்தினை சோதனை செய்து நாம் முடிவொன்றினை எடுப்போம். மாலிங்க என்பது விசேட பந்து வீச்சாளர்களில் ஒருவர். அவர் புதிய பந்து போன்றே பழைய பந்திலும் முழுத் திறமையையும் காட்டுகிறார்” என பொண்டீன் தெரிவித்துள்ளார்.

லசித் மாலிங்க போட்டியில் பங்கு பெற்றாதவிடத்து அவருக்கு பதிலாக டிம் சவூதி அல்லது மர்ச்சன்ட் த லேங்க் விளையாட அழைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்னும், IPL போட்டியில் வரலாற்றிலேயே அதிகூடிய விக்கெட் பெற்றவராக லசித் மாலிங்க போட்டிகள் 98ல் 143 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)