தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெறாதுள்ள லசித் மாலிங்கவுக்கு எதிர்வரும் 2019ம் ஆண்டு நடைபெறவுள ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்குவதா என்பது குறித்து தேர்வுக் குழுவின் செயலாளர் கிராஹெம் லெப்ராய் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் கலந்து கொண்டு விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளார்.
மேலும், மாலிங்கவுக்கு எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“நாம் உலகக் கிண்ணத்திற்கு தேர்வு செய்யும் வீரர்கள் தேசிய அணியின் ‘ஏ’ அணியில் விளையாடுவார்கள். உபுல் தரங்க ‘ஏ’ அணியில் விளையாடுவது அதனை நோக்காகக் கொண்டே… அவ்வாறே சிரேஷ்ட மற்றும் புதிய வீரர்கள் அனைவரும் விளையாட தெரிவு செய்வது.. நாம் மாகாண போட்டிகளில் விளையாட மாலிங்கவுக்கு அழைத்தோம். தென்னாபிரிக்கா அணியுடனான ஒருநாள் போட்டிகளில் இறுதி ஓவர் பந்து வீச லசித் மாலிங்க போன்ற வீரர் ஒருவர் வேண்டுமென்று பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க கூறினால் மாலிங்கவுக்கு வாய்ப்பு கிட்டும். நாம் இருபதுக்கு இருபது போட்டிகள் மட்டுமின்றி ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகள் இரண்டிலும் விளையாடும் வீரர்களையே தேர்வு செய்வோம். ஆனால், தற்போது உபாதைக்கு உள்ளாகியிருந்த அனைத்து வீரர்களும் ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். எமது ஆடுகளமும் மந்தமானது, ஆதலால், தீர்மானங்கள் எதுவும் இப்போதைக்கு கூற முடியாது… “