அவுஸ்திரேலிய அணியுடனான இடம்பெற்ற இரண்டாவது T-20 போட்டியின் கடைசி ஓவரானது அனைவரதும் கவனத்தினை ஈர்ந்ததொன்று எனலாம்.
துடுப்பாட்டத்தில் ஒத்தாசையாக இருந்து ஆலோசனை வழங்கிய லசித் மலிங்க குறித்து அசேல குணரத்ன கூறுகையில்;
“நானும் சாமரவும் தான் துடுப்பெடுத்தாடினோம்.. எங்கள் இருவரதும் திட்டம் இன்னும் 10 ஓவர் வரும் வரையில் ஆட்டமிழக்காமல் இருப்பதே.. எவ்வாறாயினும் சாமர ஆட்டமிழந்தார்…
சகோ.மாலி (மலிங்க) வரும் போது 5 பந்துகளுக்கு 14 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையே காணப்பட்டது. சகோ.மாலி என்னை உற்சாகப்படுத்தினார்.. ஓட வேண்டாம்.. தனியாகவே பந்தினை அடிக்குமாறு கூறினார். என்றாலும் சகோ.மாலி ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் முன்னர் என்னுடன் வந்து கதைத்து என்னை ஊக்கப்படுத்தினார். இறுதியில் 3 ஓட்டங்கள் எடுக்கவுள்ள நிலையிலும் கூறியது விக்கெட்டினை இழக்காது ஓங்கி அடிக்குமாறு.. அவுட் ஆகினால் உன்னால் முடியாதென்றே ரசிகர்கள் நினைக்கும் என எனது சிந்தனைகளை சிதரவிடாது என்னை உற்சாகப்படுத்தினார்..” என தெரிவித்திருந்தார்.