ஐபிஎல் ஏலம் எதிர்வரும் 27,28ம் திகதிகளில் இந்தியாவின் பெங்களூர் நகரில் இடம்பெறவுள்ள நிலையில், அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி வீரர்களின் பெயர் பட்டியல் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த பெயர் பட்டியலில் படி பரிந்துரைக்கப்பட்ட 1172 வீரர்களில் 578 பேர் மாத்திரமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி , 18 இலங்கை வீரர்கள் மாத்திரமே இம்முறை IPL ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் , 39 இலங்கை அணி வீரர்கள் இந்த ஏலத்தில் பெயரிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஏலத்தில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை அணி வீரர்களின் விபரம்
1.அஞ்சலோ மெத்தியூஸ்
2.லசித் மாலிங்க
3.நிரோசன் திக்வெல்ல
4.குசல் பெரரோ
5.அகில தனஞ்சய
6.லக்ஷான் சந்தகேன்
7.சச்சித்திர சேனாநாயக்க
8.அசேல குணரத்ன
9.திஸர பெரேரா
10.தில்ஷான் முனவீர
11.சீக்குகே பிரசன்ன
12.தசுன் சானக
13.துஸ்மந்த சமீர
14.நுவான் குலசேகர
15.சுரங்க லக்மால்
16.தனஞ்சயடி சில்வா
17.இசுரு உதான
18.உபுல் தரங்க
#rishma