மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அஹமத் அதீப் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. படகு ஒன்றை வெடிக்கச் செய்து ஜனாதிபதி அப்துல்லா யாமீனை படுகொலை செய்ய முயற்சித்தார் என அஹமத் அதீப் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
விசாரணைகளின் போது குற்றச்சாட்டு உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குறித்த இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு ஏற்கனவே அஹமத் அதீபிற்கு 10 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாம் இந்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமைக்காக அஹமத் அதீபிற்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.