மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

(FASTNEWS|COLOMBO) – மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(14) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரின் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் அவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவின் தற்போதைய ஆளும் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சியின் பிரதிநிதிகள் குழுவினரும் இதில் உள்ளடங்குவதாக பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது