பன்றிக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மாலைதீவு பிரஜையை வைத்தியசாலையில் அனுமதிக்காமையால் அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
லங்கா ஹொஸ்பிட்டலின் பொறுப்பற்ற செயற்பாடே இந்த மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இந்த குற்றச்சாட்டை லங்கா ஹொஸ்பிட்டல் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் பிரசாத் மடவத்த மறுத்துள்ளார்.
லங்கா ஹொஸ்பிட்டலில் தற்போது 12 மாலைதீவு பிரஜைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 10 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டவர்கள், ஏனையவர்கள் இருவரும் சாதாரண நோயாளர்கள்.
அவர்களில் எவருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை, வைத்தியசாலையின் நற்பெயரை கெடுக்கும் வகையிலேயே இவ்வாறு வதந்திகள்பரப்பப்பட்டு வருகின்றன.
நோயாளர்களுக்கு தொந்தரவு இன்றியே எமது வைத்தியசாலையில் செயற்பட்டு வருகின்றது என நிர்வாக அதிகாரி பிரசாத் மடவத்த விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.