நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமிற்கு 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்கத் தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூமுக்கு சிறைத்தண்டனை விதித்து மாலைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மம்மூன் அப்துல் கயூம் 1978-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை சர்வாதிகாரியாக இருந்தார். தன்னுடைய சகோதரரும், தற்போதைய ஜனாதிபதியுமான யாமீன் அப்துல் கயூமின் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக, கடந்த பிப்ரவரி மாதம் கயூம் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், விசாரணை அதிகாரிகளிடம் தனது கையடக்கத் தொலைபேசியை ஒப்படைக்க மறுத்த குற்றத்துக்காக மம்மூன் அப்துல் கயூமுக்கு 19 மாதம் சிறைதண்டனை விதித்து, மாலைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.