கொழும்பு – மாளிகாவத்தை ஜும்மா பள்ளிக்கு முன்பதாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.