ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விளையாடும் மாஸ்டர் சம்பியன்ஸ் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் கில்கிறிஸ்ட் அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கில்கிறிஸ்டின் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், ஸ்மித்தின் விர்கோ சுப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி மஹேல ஜயவர்தனவின் விளாசலில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 69 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய விர்கோ அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. அசார் முகமது (51) மட்டும் அரைசதம் கடந்தார்.
இதன் மூலம் சகிட்டரி யஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.