மாஸ் மீடியாவினது ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை

பாடசாலை மாணவர்களுக்கு ஊடகம் தொடர்பான விளக்கங்களை வவுனியா North Mass Media College மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் இணைந்து கடந்த கிழமைகளில் வெற்றிகரமாய் நடாத்தியது.

குறித்த ஊடகப்படிகள் ஐந்து நாள் வானொலிச்சேவை கருத்தரங்கானது வவுனியாவில் இருந்து 103.1 அலைவரிசையின் அனுசரணையுடன் நடந்தேறியது.

இதில் கலந்து சிறப்பித்த மாணவனொருவர் கருத்துத் தெரிவிக்கையில்;

“உண்மையில் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வானொலி சேவை வடமாகாண மக்களுக்கு மிகவும் பிரயோசனமான நிகழ்ச்சியாக காணப்பட்டது. இங்கு செய்தி வாசிப்பு, விளம்பரம் எழுதுதல், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, Play List, How To Going ON AIR, Mixer to Transmitter to Antenna எவ்வாறு என்பது தொடர்பாகவும் விளக்கம் வழங்கப்பட்டது அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஊடக துரை அமைச்சு புதுக்குளம் மகா வித்தியாலம் மற்றும் North Mass Media Collage க்கும் எமது நன்றிகள்” என தெரிவித்திருந்தார்.

குறித்த ஊடகக் கல்லூரியின் ஸ்தாபகர் கருத்துத் தெரிவிக்கையில்;

வடமாகாணத்தில் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு ஊடக கல்லூரியாக North Mass Media College கடந்த காலங்களாக பலவகையிலும் ஊடகத்துறையில் சேவைகளை செய்து வருகின்றது. குறித்த ஊடக கல்லூரியானது ஊடகத்துறையில் மிகவும் தேர்ச்சியான ஆசிரியர்கள் ஊடாக  மாணவர்களை வழிநடாத்தியும் பல ஊடகவியலாளர்களையும் உருவாக்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

எனவும் தெரிவித்தார்.

mass-media-college.. mass-media. mass-media mass-media-college. mass-media-college misbah