மிச்செல் ஸ்ராகின் மற்றுமோர் உலக சாதனை..

அவுஸ்திரேலியா – இலங்கைக்கு இடையிலான முதலாவது 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் நேற்றையதினம் தனது சாதனையை பதிவு செய்திருக்கிறார் மிச்செல் ஸ்ராக்.

சிறப்பான முறையில் பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்ராக் ஒரு சாதனையாளராருக்குரிய பட்டியலில் தன்னையும் சேர்த்திருக்கிறார்.

ஒரு நாள் ஆட்டப் போட்டிகளில் மிகக் குறைந்த காலப் பகுதியில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே இவர் படைத்த சாதனையாகும். நடந்து முடிந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை சுழற் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறிய  அவுஸ்திரேலிய அணி, இந்த முதல் ஒரு நாள் ஆட்டத்தில் சிறப்பாக ஆடியுள்ளது.

ஆரம்ப ஆட்டவீரர் ஆரோன் பிஞ்ச்சும், அணித் தலைவர் சிமித்தும் அரைச் சதங்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.