அவுஸ்திரேலிய அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் இருவரான மிச்சேல் ஸ்ட்ராக் மற்றும் ஜோஷ் ஹோஸ்ல்வூட் ஆகியோர் அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பிற்பாடு அவுஸ்திரேலிய அணி மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
எதிர்வரும் போட்டிகளுக்காகவே மேற்குறித்த இருவருக்கும் ஓய்வு வழங்கியுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழு மேலும் தெரிவிக்கின்றது.
ஜோஷ் ஹோஸ்ல்வூட் மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் எனவும் மிச்சேல் ஸ்ட்ராக் விளையாடவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.