மினுவான்கொட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.

மினுவான்கொட பில்லவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று(24) காலை இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விசாரணைகளை காவற்றுறையினர் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.