மின்சக்தி மற்றும் புத்தாக்கல் அமைச்சு – விமர்சனங்களுக்கான காரணங்களை ஆராய குழு….

மின்சக்தி மற்றும் புத்தாக்கல் அமைச்சு தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கான காரணங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிவில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில், உலப்பனே சுமங்கல தேரர் உட்பட ரஞ்சித் விதானகே, ஊடகவியலாளர் நிஹால் கிரியல்ல, சட்டத்தரணி பிரகீத் பெரேரா, விமுக்தி துஷாந்த ஆகியோர் அங்கம் வகிப்பதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தைப் விநியோகிப்பதே அமைச்சின் பிரதான இலக்காகும் எனவும், 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக மின் வலைப்பின்னலுடன் இணைக்கப்படவில்லை என அமைச்சில் நேற்று(05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மின் சக்கத்தி, எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.