மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை – மகன் இருவரும் பலி…

வவுனியா உலுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகே தந்தையும் மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த சாகில் முகமட் முஸ்தபா(48) மற்றும் அவரது மகனான முஸ்தபா முகமட் ரயாஸ்(15) ஆகியோரே நேற்று(15) இரவு 10.00 மணியளவில் இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் மீன் பிடிக்கச் சென்றவேளையில், மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் வவுனியா குற்றத் தடயவியல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்குளத்திற்கு அருகே காணப்பட்ட மின்சார கம்பியிலிருந்து மின்சாரம் பெறப்பட்டமைக்கான தடயங்களை உலுக்குளம் பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.