மின்சார சபைக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

(FASTNEWS|COLOMBO) – நேற்று(30) நள்ளிரவு முதல் மின்சாரசபைக்கு எரிபொருள் விநியோகிப்பதை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தடங்கல்களை ஏற்படுத்துவதாக தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்களது பிரச்சினைக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் எதிர்காலத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் கனிய எண்ணெய் கிளை தலைவர் ஜகத் விஜயகுணரத்ன தெரிவித்துள்ளார்.