மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம்

(FASTNEWS | COLOMBO) – இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இன்று(09) வெற்றி அளித்துள்ள நிலையில், மின்சார சபைக்கு எரிபொருள் வழங்க பெற்றோலிய திணைக்களம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இன்று முதல் மின் தடை ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டி இருந்த ஒரு பில்லியன் ரூபா பணத்தை செலுத்த தாமதமானமையினால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டு நேற்று(08) நாட்டின் பல இடங்களில் மின் தடை ஏற்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.