மின்சார சபைக்கு புதிய பணிப்பாளர் சபை நியமனம்…

மின்சக்தி , எரிசக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , மின்சார சபையின் புதிய தலைவராக ரகின ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உப தலைவராக ரஜீவ் செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் , மின்சார சபையின் செயற்பாட்டு பணிப்பாளராக கே.கே.திஸ்ஸ ஜனதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

அணு சக்தி வாரியத்தின் புதிய தலைவராக தீபால் சுமன்த்ரீ குணரத்தன நியமிக்கப்பட்டுள்ளார்.