தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை வாழ் மக்கள், இவ்வாரம் மின்தடை தொடர்பில் விசாரிக்க, 011-4418418 என்ற இலக்கத்துக்கு அழைப்புக்களை மேற்கொண்டபோது பதில் கிடைக்காமையால் அவர்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
’14 இணைப்புக்களில் 03 தொலைபேசி ஊழியர்கள் தான் வேலை செய்கின்றர். எனவே, சகல அழைப்புக்களுக்கும் பதிலளிப்பது சாத்தியமானதல்ல’ என அவர் கூறினார்.
எனினும், இந்த முறைப்பாடுகளைத் தான் கவனத்தில் எடுத்து தொழில் நுட்பக்கோளாறுகள் இல்லாதிருப்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.
இலங்கை மின்சார சபையின் தலைவர் அனுர விஜேபாலவுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, இரவு நேரம் கடமையில் இருக்க வேண்டியவர்கள் வந்திருக்கவில்லை எனவும் சிலர் தமது வேலைகளைச் சரியாகச் செய்யவில்லை எனவும் கூறினார்.
‘என்ன நடந்ததென்று நாம் அறியோம். ஆனால், நாம் அறிமுகம் செய்துள்ள 1987 அவசர அழைப்பு இணைப்பு மூலம் நுகர்வோர் எந்நேரமும் எம்முடன் தொடர்பை ஏற்படுத்தலாம்’ என்றார்.