மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகல்…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை(13) நள்ளிரவு முதல் முன்னேடுக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமது சங்கம் பங்கேற்பதில்லை என இலங்கை மின்சார சபையின் கண்காணிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் நெடுநாள் பிரச்சினையான சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளுக்கு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு யோசனைகளை முன்வைத்துள்ள நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மின்சார சபையின் வடிவமைப்பாளர்கள் சங்கமும் குறித்த சேவை நிறுத்தப் போராட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)