(FASTNEWS|COLOMBO)- மின் துண்டிப்பு குறித்து உடனடியாக அறிவிப்பதற்காக புதிய தொலைபேசி செயலி (App) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இன்று(17) இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இதனடிப்படையில் மின்வெட்டு, முறைப்பாடுகளை முன்வைத்தல், மின்கட்டணம் தொடர்பிலான சேவைகளை இந்த அப்பினூடாக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் 50ஆவது ஆண்டின் நிறைவுக்கு அமைவாக மின்சார பாவனையாளர்களுக்கு மிகவும் செயன்திறன்மிக்க சேவைகளை வழங்குவதற்காக கையடக்க தொலைபேசி மூலமான மென்பொருள்களை பயன்படுத்துவதற்கு மின்சாரசபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.