மின்சக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் உள்ளிட்ட அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியாக ஏற்பட்ட மின்சார விநியோக தடை தொடர்பிலான காரணங்களை கோரவே அவர்கள் அழைக்கப்பட்டள்ளதாகவும் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின்நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் 5 மணியளவில் மின்நிலையத்திற்கு நீர் நிரப்பும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை காலை முதல் நுரைச்சோலை அனல்மின்நிலைய செயற்பாடுகள் மீண்டும் வழமைக்கு திரும்பக் கூடும் என அந்த பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.