மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம்…

மின்சார சபை ஊழியர்களது சம்பள முரண்பாடுகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டி எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் 24 மணி நேர சேவைப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ரஞ்சித் ஜயலால் இன்று(09) தெரிவித்துள்ளார்.

அதன்படி, பொறியியல் அல்லாத பிரிவுகளில் சேவை செய்யும் அனைத்து ஊழியர்களும் மருத்துவ விடுப்பு முறையில் விடுமுறையினை வேண்டி எதிர்ப்பினை வெளியிடவுள்ளதாகவும், பொதுமக்களின் அசௌகரியங்களுக்கு அரசு பொறுப்பேற்றாக வேண்டும் எனவும் குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

2015ம் ஆண்டு பொறியியலாளர்களுக்கு 70% இற்கும் 120% இற்கும் இடையில் சம்பள உயர்வு வழங்கப்பட்டதாலேயே குறித்த சம்பள முரண்பாடு ஏற்பட்டதாகவும் செயலாளர் ரஞ்சித் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)