மின்சார சபை தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை, கோப் குழு முன்னிலையில்…

இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை இன்று (07) பாராளுமன்ற வளாகத்தில் இன்று மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் கோப் குழுவின் கலந்துரையாடலுக்கு, கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தனியார் துறையினரிடம் இருந்து மின்சாரம் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடலே இன்று நடைபெற உள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

R.Rishma