இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இன்று(18) பிற்பகல் 2.30 மணிக்கு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்னவின் தலைமையில் தொழில் அமைச்சில் நடத்தப்பட உள்ளது.
சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13ம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
மின்வலு எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, அமைச்சு அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் குறித்த இந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)