மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் சிக்கல் – மின்வலு பிரதியமைச்சர்.

மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்வலு பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை மின் நிலையத்திற்கு பின்னர், நாட்டில் பிரதான மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமை இந்த சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை சூரிய சக்தி மூலம் 50 மெகாவோட் மின்சக்தியை தேசிய கட்டமைப்புக்கு வழங்க முடிந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகுமாயின் நாட்டுக்கு இருக்கும் ஒரே சிறந்த மாற்றுவழி சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகும் எனவும் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.