அண்மையில் வெடிப்பு ஏற்பட்ட இரண்டு மின்மாற்றிகளையும் பரிசோதனை செய்வதற்காக, ஜேர்மனியில் இருந்து விசேட குழு ஒன்று இன்று(21) இலங்கை வருகிறது.
சக்திவலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
கொட்டுகொட மற்றம் பியமகவில் உள்ள மின்சார பரிமாற்றிகளில் உள்ள கருவிகளில் ஒரே மாதிரியான வெடிப்புகள் ஏற்பட்டன.
குறித்த இந்த கருவிகளை தயாரித்த ஜேர்மனியில் உள்ள நிறுவனத்தின் பிரதிநிதிகளே இன்று இலங்கை வருகின்றனர்.
இன்னும் அதேநேரம், இது குறித்து ஆய்வு செய்வதற்காக ஜப்பானில் இருந்தும் விசேட குழு ஒன்று கடந்த 19ம் திகதி இலங்கை வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.