மின்வள உற்பத்தியை 150 மில்லியன்களாக அதிகரிக்க நடவடிக்கை…

2020 ஆம் ஆண்டளவில் மீன்வள உற்பத்தியை 150 மில்லியன்களாக அதிகரிப்பதற்கு, மீன் வளர்ப்பு நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டளவில் இலங்கை மீன்வளர்ப்பு மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு 256,200 மெட்ரிக் தொன் மீன் உற்பத்தியை எதிர்பார்க்கின்றது.

பாராளுமன்றத்தில் நேற்று(20) பாராளுமன்ற உறுப்பினர் அசோக்கா பிரியந்த மீன்வளர்ப்பு மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சருக்கு விடுத்த வாய்மூலமான கேள்விக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக்க பதிலளித்தார்.

மீன் வளர்ப்புக்கான குளங்களிற்கு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்குளங்களில் புதிதாக நீர் மீன் வளர்ப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. வடமேல் மாகாணத்தில் ஏற்கனவே தொழில்நுட்ப ரீதியாக பொருத்தமானதாக கருதப்படும் பகுதிகளில் புதிதாக நீர் மீன் வளர்ப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நீர்த்தேக்கங்களுக்குமான மீன்உற்பத்திக்கு 300 மில்லியன் மீன் குஞ்சுகள் தேவைப்படுகிறது . தற்போது 82 மில்லியன் மீன்குஞ்சுகள் மூலம் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டிற்குள் இந்த மீன் உற்பத்தி 150 மில்லியன்களாக அதிகரிக்கும் என்று அமைச்சு எதிர்பார்க்கின்றது.

புதிய மீன்உற்பத்தி நிலையங்களுக்கான நிர்மாணப்பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றது. மேலும் இந்த நிலையங்கள் விரிவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.