நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.