மியன்மாரைச் சேர்ந்த பெளத்த பிக்குகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மியன்மாரைச் சேர்ந்த ஏழு பிக்குகள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்ததாகவும் அவர்களுக்கு, நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்திருந்தன.
ரோஹிங்யா முஸ்லிம்கள் சுற்றுலா விசாக்களில் நாட்டுக்குள் பிரவேசித்து புகலிடம் பெற்றுக் கொள்வதனை தடுக்கவே மியன்மார் பிரஜைகளுக்கான சுற்றுலா விசா வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மியன்மார் இராஜதந்திரிகளுக்கு மட்டுமே தீவிர சோதனைகளின் பின்னர் விசா வழங்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)