மியன்மார் முஸ்லிம்களுக்கான ஆதரவுப்பேரணியில் மனோகணேஷன்

இன்று கொழும்பு வாழ் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை தொழுகையின் பின் பர்மா முஸ்லிம்களின் இனப் படுகொலையினை கண்டித்து இடம்பெறும் அமைதிப் பேரவையில் தமிழர்களாகிய நீங்களும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனநாயக முன்னணித் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

வித்யாவின் கொலையில் முஸ்லிம் பங்கெடுப்பதையடுத்து அடுத்து தாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், கடந்த காலங்களில் தான் நாம் இவ்வாறான கண்டனங்களில் கலந்து கொள்ளாது ஒதுங்கியிருந்தோம், ஆனால் இனி நாம் அவ்வாறு இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தார்.