(FASTNEWS | COLOMBO) – மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை வெளியேற்றுவதற்கு தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
1948 ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்களுக்கான நீதிமன்றம் அல்லது நிறுவன செயற்பாடு முடியும் வரையிலும் மற்றும் இந்த செயற்பாடுகளின் இறுதியில் மீண்டும் தமது தாய் நாட்டுக்கு செல்வதில் தாமதப்படுத்தியிருக்கும் வெளிநாட்டவர்களை மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவர்.
இந்த தடுப்பு முகாமில் 36 பேருக்கே போதுமான வசதிகள் இருந்த போதிலும் தற்பொழுது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 166 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்கு தடுத்து வைக்கப்ட்டோர் மத்தியிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீண்டும் அவர்களது தாய் நாட்டுக்கு இந்நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு தேவையாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.