மிருக வதையை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் விரைவில் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜைகளை தடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார்.
எதிர்வரும் வாரத்தில் குறித்த உத்தேச சட்ட யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்து சமய மற்றும் கலாச்சார விவகார திணைக்களம் இந்த உத்தேச சட்டத்தை தயாரித்து சட்டவாக்க திணைக்களத்தின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது.
மத வழிபாட்டு நோக்கில் மேற்கொள்ளப்படும் மிருக பலி பூஜை வழிபாடுகளுக்கு பல்வேறு தரப்பினர் கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.